728x90 AdSpace

<>
Latest News
Friday, 11 October 2019

விடுதலைப்புலி இயக்கத்துடன் தொடர்பு? வெளிநாடொன்றில் சிக்கிய முக்கிய 7 புள்ளிகள்!

தமிழீழ விடுதலைப் புலி இயக்கத்துடன் தொடர்பிலிருந்த சந்தேகத்தின் பேரில் ஏழு பேர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் அந் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என சர்வதேச செய்திகளை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மலாக்கா, நெகிரி செம்பிலான், கெடா, கோலாலம்பூர், பேராக் ஆகிய மா நிலங்களில் தலா ஒருவரும், சிலாங் கூரில் இருவரும் கைது செய்யப்பட் டனர். மலாக்கா மாநில நிர்வாக மன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதன், சிரம்பான் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் ஆகியோர் அவர்களுள் அடங்குவர். 

“தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பிலிருந்த சந்தேகத்தின்பேரில் இவர் கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சில காலமாகவே கண்காணிக்கப்பட்டு வந்தனர்,” என தகவல் அறிந்த ஒரு தரப்பு “த ஸ்டார்” செய்தித்தாளிடம் தெரி வித்தது. 

சிரம்பானில், நெகிரி செம்பிலான் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழக்கிழமை காலை சுமார் 9 மணியளவில் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார் என தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட் டத்தின் கீழ் அவர் விசாரிக்கப்படுவதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: விடுதலைப்புலி இயக்கத்துடன் தொடர்பு? வெளிநாடொன்றில் சிக்கிய முக்கிய 7 புள்ளிகள்! Rating: 5 Reviewed By: Thamil