728x90 AdSpace

<>
Latest News
Thursday, 10 October 2019

வடபகுதி வைத்தியசாலை ஒன்றில் சிறுவன் மர்ம மரணம்! கிராமத்தவர்களின் முற்றுகைக்குள் வைத்தியசாலை!

வவுனியா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட ஏழு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பெற்றோர், உறவினர்கள் வைத்தியசாலையினை முற்றுகையிட்டமையால் இன்றயதினம் வைத்தியசாலையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

 மேலும் தெரியவருகையில்,

தோணிக்கல் பகுதியில் வசிக்கும் ஜெயச்சந்திரன் டிலக்சன் என்ற ஏழு வயது சிறுவனுக்கு திடிர் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் நேற்று அதி காலை 3.30 மணிக்கு வவுனியா வைத் தியசாலையில் தாயார் அனுமதித் துள்ளார். 

குறித்த சிறுவனின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தமையினால் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு நான்கு மணி நேரம் சிகிச்சை அளிக்கப் பட்ட போதும் குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளான். 

இதனால் குழந்தையின் தாயார் உறவினர்கள் கிராமத்தவர்கள் வைத்திய சாலையை முற்றுகையிட்டமையால் சற்றுநேரம் குழப்பமான ஒரு நிலை ஏற் பட்டது. இது பற்றி மரணமடைந்த சிறுவனான ஜெயச்சந்திரன் டிலக்சனின் தாயார் கருத்துத் தெரிவிக்கும் போது, என் மகனின் காலில் சிறிய பரு ஒன்று காணப்பட்டது. 

அது எவ்வாறு வந்தது என மகனிடம் கேட்டேன் அதற்கு நண்டு குத்தியது என்று சொன்னான். பின் நான் சாப்பாடு அவனுக்கு கொடுத்தேன். அதன் பின் னர் என் பிள்ளை மிகவும் இயலாமல் காணப்பட்டதுடன், அவனது மலம் கறுப் பாக போனதை அவதனிக்க கூடியதாக இருந்தது. 

ஒரு கட்டத்தில் என் பிள்ளையின் உடல் எங்கும் நீல நிறமாக மாறியதால் நான் பயந்த நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் வைத்தியசாலையில் அனுமதித்தேன். வைத்தியசாலையில் என் மகன் இறந்து விட்டதாக தற்போது சொல்கின்றனர் என கண்ணீர் மல்க தெரிவித்தார். 

இது தெடர்பாக வவுனியா வைத்தியசாலையில் கேட்ட போது, குறித்த சிறு வன் வரும் போது உடல் பூராகவும் நீல நிறமாக காணப்பட்டது. மிகுந்த ஆபத் தான நிலையிலே அதிகாலை 3.30 மணிக்கு வைத்தியசாலையில் அனும தித்தனர். 

குறித்த சிறுவன் வவுனியா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நான்கு மணி நேரத்தின் பின்னர் இறந்துள்ளார். இது தெடர்பான மேலதிக தகவல்களை சிறுவனின் சட்டவைத்திய பரிசோ தனையின் பின்னரே தெரிவிக்க முடியும் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: வடபகுதி வைத்தியசாலை ஒன்றில் சிறுவன் மர்ம மரணம்! கிராமத்தவர்களின் முற்றுகைக்குள் வைத்தியசாலை! Rating: 5 Reviewed By: Thamil