கடந்த கொடூர யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் உளவியல் ரீதியாக மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலையிலும் அதனை தாண்டி தேசிய ரீதியில் வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதியை சேர்ந்த தமிழ் மாணவர்கள் பலர் சாதித்து வருகின்றனர்.
இவர்களுக்கு போதிய அளவு வளங்கள் இல்லாதிருந்தாலும் இவர்கள் சோர்ந்து போகாமல் சாதித்து வருகின்றனர். இப்படியான சாதனையாளர்களை வெளி யுலகிற்கு கொண்டுவரும் முயற்சியிலான பயணம் வெற்றிப் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் கொழும்பில் இடம்பெற்ற 2019-ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான தமிழ் தின நாடக போட்டியில் முதலாம் இடத்தினை பெற்று சாதித்திருக்கின்றனர் யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதயா கல்லூரி மாணவர்கள்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை இந்த காணொளியில் காணலாம்.