100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான புயல் ஜப்பானை தாக்கப் போகிறது. ஜப்பானின் தலைநகர் டோக்கியோ மற்றும் அதன் சுற்றுப்புறங் களை ஹகிபிஸ் புயல் நெருங்கி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வானம் பிங்க் மற் றும் ஊதா நிறத்திற்கு மாறியுள் ளது.
ஏற் கனவே மழையால் பேரழிவு ஏற்ப டும் அபாயம் உள்ள நிலையில புயல் நெருங்கும் வேளையில் பிங்க் மற் றும் ஊதா நிறத்திற்கு வானம் மாறி இருப்பது மக்களை இன்னும் அதிர்ச் சிக்குள்ளாக்கி உள்ளது.
ஜப்பானில் தற்போது மிகப்பெரிய கனமழை பெய்துவருகிறது.
காற்று பயங்கர மாக வீசி வருகிறது. புயல் நெருங்கி உள்ள நிலையில் வானம் திடீரென அடர் ந்த பிங்க் நிறத்திற்கு மாறியது.
அப்படியே தற்போது ஊதாவாக மாறிக்கிடக் கிறது.
புயல் நெருங்கும் வேளையில் திடீரென வானம் ஊதா நிறத்திற்கு மாறியி ருப்பது ஜப்பான் மக்களை பீதிக்குள்ளாக்கி உள்ளது.
ஊதா வானம் என்பது உண்மையில் மிகப்பெரிய சூறாவளிக்கு முந்தைய அல்லது பிந்தைய நிகழ்வு என்கிறார்கள்.
ஊதா வானம் என்பது சிதறல் எனப்படும் வானிலை நிகழ்வின் விளைவு என்று வானியலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.