ஜனாதிபதி தேர்தலில் பொது இணக்கப்பாட்டிற்கு வந்துள்ள ஐந்து தமிழ் கட் சிகள் தொடர்பில், தென்னிலங்கையில் பௌத்த பிக்குகள் நேற்று இனவாத த்தை கக்கினர். 5 கட்சிகளினால் இணக்கம் காணப்பட்ட 13 கோரிக்கைகளை யும் ஏற்க முடியாதென்றும், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானால் தமிழ் அரசியல் கட்சிகளிற்கு புனர்வாழ்வளிக்க வேண்டுமென்றும் கோரியுள் ளனர்.
இது தொடர்பில் பௌத்த பிக்குகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு.
ஓமல் பே சோபித தேரர் குறிப்பிடுகை யில்,
மகாவலி குடியேற்றத் திட்டம் நீக்கப்பட வேண்டும் என்றும், ஒரு மைப்பாடும் அல்லது ஒற்றையாட்சி முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும் பதின்மூன்று கோரிக்கைகளை தமிழ் கட்சிகள் முன் வைத்துள்ளனர்.
இந்த கோரிக்கைகளை எந்த கட்சி ஏற்றுக் கொள்ளப் போகிறது என்பதை நாமும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருக்கிறோம். எந்தவொரு வேட்பாளருக் கும் இவற்றை கையிலெடுத்து வாசிப்பதற்கு கூட உரிமை கிடையாது என்று குறிப்பிட்டார்
எல்லே குணவங்ச தேரர் குறிப்பிடுகையில்,
5 தமிழ் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளில் ஒற்றையாட்சி நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப் பாக வடக்கு மற்றும் கிழக்கை சுயநிர்ணய எல்லையாக கூறுகின்றனர். இவர் கள் முழு இலங்கையையும் சுயநிர்ணய எல்லையாக கூறினால்,
அதை நாம் ஏற்றுக் கொள்வோம். ஆனால் வடக்கை மாத்திரம் கூறுவதை ஏற்க முடியாது.
மீண்டும் அடிப்படைவாதிகளை உருவாக்குவதற்கான முயற்சிகளே தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.
ஒருபுறம் முஸ்லிம் அடிப்படைவாதிகள், மறுபுறம் தமிழ் அடிப்படைவாதிக ளும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் தீர்வு வழங்கப்படவில்லை என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை என்னை சந்தித்தபோது கூறி னார்.
தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளை இன்னமும் அரசாங் கத்தால் கண்டுபிடிக்க முடியாதுள்ளது.
இந்நிலையில் இந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தும் என்ன பயன்? எனவே மக்கள் இம்முறை தமது வாக்குகளை முறையாக பயன்படுத்த வேண்டும் என்றார்.
காமல்கந்தே தேரர் குறிப்பிடுகையில்,
தமிழ் அரசியல்வாதிகளின் இந்த அடிப்படைவாத கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை தோல்வியடைய செய்த போதிலும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க முடியாமல் போயுள்ளது. விடுதலைப் புலிகளின் கொள்கைகளை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு கோட்டாபய ராஜபக்ச ஜனாதி பதியானதன் பின்னர் புனர்வாழ்வளிக்குமாறு கோருகின்றேன் என்றார்.