728x90 AdSpace

<>
Latest News
Friday, 11 October 2019

நாடு ஆசீர்வதிக்கப்பட வேண்டுமானால் தேரர்கள் விலக வேண்டும்!

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, தேரர்கள் அரசியலில் இருந்து முழுவதுமாக விலக வேண்டும் என தெரிவித்துள்ளார். 

மேலும், தான் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் தேவாலயம் ஒன்றில் இருந்த போது, பிரதி அமைச்சர் ஒருவர் தான் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனக் கூறினார். நான் கேட்டேன் ஏன் என்று. 

அதற்கு பிரிதி அமைச்சர் தான் அரசியலில் தேவையான அளவு பணத்தை சம்பாதித்து விட்டேன் என்று கூறினார் எனவும் தெரிவித்திருந்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், எனக்கு அதிர்ச்சி யாக இருந்தது. அந்த பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. 

கடந்த 30 வருடங்களுக்கு முன்னரும் இலங்கையில் இதுபோன்ற நிலைமை தான் காணப்பட்டது. தற்போது எனக்கு 70 வயதாகின்றது. எனது இளைஞர் பரு வத்தில் இருந்து இவர் போன்றவர்களை பார்த்துக் கொண்டு தான் உள்ளேன் எனவும் தெரிவித்திருந்தார். 

கொள்ளையர்கள் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள். இதனை அரசியலமைப்பிலேயே மாற்ற வேண்டும். சரியாக நடக்க கூட முடியாதவர்கள் இளைஞர்களை மேலே வரவிடாமல், அவர்களது தாய் தந்தைக்கு சொந்தமானது போல பயன்படுத்துகிறார்கள்.

தனது எண்ணம் என்னவென்றால், தேரர்கள் அரசியலில் இருந்து முழுவதுமாக விலகும் காலம் தான் இந்நாடு ஆசீர்வதிக்கப்படும் என்றும் பேராயர் மெல்கம் கார்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: நாடு ஆசீர்வதிக்கப்பட வேண்டுமானால் தேரர்கள் விலக வேண்டும்! Rating: 5 Reviewed By: Thamil