எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முடிவை பல தேர்தல் அமைப்பாளர்கள் எதிர்த்த தாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமார துங்க ஆதரவு வழங்க மறுப்பு தெரி வித்துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.
மேலும் கோட்டாவுக்கும் தனது ஆத ரவை வழங்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கூறியுள்ளதாகவும் கட்சித் தகவல்கள் தெரி விக்கின்றன.
இந்நிலையில் சந்திரிகா, எதிர்கால நிலைப்பாடு எதுவும் அறிவிக்காமல் இங்கி லாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமையினால் அக்கட்சியின் அமைப்பாளர் கள் எதிர்கால நடவடிக்கை குறித்து தீவிரமாக குழப்பமடைந்துள்ளதாக கூறப் படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் இயங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களே இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.