230 மில்லியன் டொலர் நிதிப் பற்றாக்குறையுடன் இயங்கி வருவதாக தெரி வித்துள்ள ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் இம்மாத இறு திக்குள் மீதமுள்ள நிதியும் தீர்ந்துவிடும் என்ற அபாயம் உள்ளதாகவும் அச்சம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதிக் குள் சபையை நடத்த பணம் இல்லா மல் போகக்கூடும் எனவும் அச்சம் வெளியிட்டுள்ளார்.
ஐ.நா. செயலகத் தில் உள்ள 37,000 ஊழியர்களுக்காக சம்பளம் மற்றும் உரிமைகள் வழங் கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஐ.நாவுக்கு வழங்க வேண்டிய நிதிகளை உறுப்பு நாடுகள் முறையாக செலுத்த வில்லையெனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.