ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நான்கு முக்கிய வேட்பாளர்களின் பாது காப்பை பலப்படுத்துமாறு காவல்த்துறை மற்றும் தேர்தல்கள் ஆணைக் குழு விற்கு புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ, சஜித் பிரேமதாச, அனுர குமார திசாநாயக்க, முன்னாள் இராணுவத் தள பதி மகேஷ் சேனநாயக்க ஆகியோரின் பாது காப்பை பலப்படுத்துமாறே புலனாய்வுத்துறை அறிவித்துள்ளது.
வேட்பாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக பெறப் பட்ட புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையி லேயே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பத்தரமுல்ல சீலரத்ன தேரர், சரத் மனமேந்திர ஆகியோர் தங்க ளின் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்க அண்மையில் நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.