இலங்கையில் வாழும் அனைத்து இந்து மக்களையும் பிரிநிதித்துவப்படுத்தும் வகையில் ‘இலங்கை தேசிய இந்து பேரவை’ என்ற பெயரில் சபையொன்றை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்து சமய, கலாச்சார, அரச மொழிகள், தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் மனோ கணேசன் முன்வைத்துள்ள யோசனை க்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி யுள்ளது.
தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மற்றும் சமூகமேம்பாட்டை கட்டி யெழுப்புவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை வலுப்படுத்து தல், இந்து மத நம்பிக்கை,
இந்து கலாச்சாரம் மற்றும் இந்து மரபுரிமையை மாவட்ட மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் பாதுகாப்பதற்கும் வலுவுடன் இலங்கையை கட்டியெழுப்புவதற் காக சமூகத்தில் ஏனைய சமூகங்களுடன் சமத்துவத்துடன் செயல்படல் போன்ற இலக்கை எட்டும் எதிர்பார்ப்புடன் இத்திட்டம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வாழும் அனைத்து இந்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத் தும் வகையில் ‘இலங்கை தேசிய இந்து பேரவை என்ற பெயரில் சபை யொன்றை ஸ்தாபிப்பதற்காக அமைச்சர் மனோ கணேசன் சமர்ப்பித்த பரிந் துரைக்கே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.