கோட்டாபய ராஜபக்சவை கைது செய்ய, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் சிலர், அமைச்சர் ராஜித சேனரத்னாவின் வீட்டில் கடிதமொன்றை தயார் செய்திருந்தார்கள்.
நான் தலையிட்டதையடுத்து, அந்த முயற்சி கைவிடப்பட்டது என பர பரப் புத் தகவலை வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச.
இன்று கொழும்பு இலங்கை மன்ற கல்லூரியில் நடந்த செய்தியா ளர் சந்திப்பில், தனது ஆதரவை கோட்டாபய ராஜபக்சவிற்கு அறிவித்தார். இதன் பின்னர் உரையாற்றியபோதே இந்த தகவலை வெளியிட்டார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராகுவதை தடுக்க, இந்த முயற்சி எடுக்கப்பட்டது என்றார்.
அப்போது, நீதியமைச்சராக இருந்த தான், அதை தடுத்து நிறுத்தியதாக குறிப்பிட்டார். அமைச்சர் ராஜிதவின் வீட்டில் தயா ரிக்கப்பட்ட கடிதத்தில் சட்டமா அதிபர் திணைக்கள துணை அதிகாரியொரு வரின் கையொப்பமிருந்தது.
எனினும், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் சிலருக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டது தெரியாது.
அவர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட இருந்தார். நான் ஜனாதிபதியிடம் பிரதமரிடம் சொன்னேன். பின்னர் அவர்கள் அதைத் தடுத்து நிறுத்தினர் என்றார்.