ஜனாதிபதி தேர்தல் பந்தயத்தில் குதித்து சமூக ஊடகங்களில் வறுத்தெடுக்கப் பட்டு வரும் சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோரை தமிழ் மக்கள் கட்சியிலோ, அதன் கூட்டணியிலோ இணைக்கக்கூடாது என்ற எதிர்ப்பு எழுந்துள்ளது.
கட்சியின் பிரமுகர்கள் பலர் க.வி. விக்னேஸ்வரனிடம் இதை நேரில் வலியுறுத்தியுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் பந்தயத்தில் சிவாஜி குதித் ததையடுத்து, கட்சிக்குள் கடும் எதிர் ப்பு கிளம்பியது. சிவாஜியை சமர சப் படுத்த முயன்ற கட்சி பிரமுகர்கள், அவர் கட்டுப்பாடுகளை மீறினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டுமென தெரிவித்திருந்தனர்.
அப்போது, கட்சியை விட்டு விலக்கினால் விக்னேஸ்வரன் அணியில் இணை ந்து கொள்வேன், விக்னேஸ்வரன் என்னை வரவேற்க தயாராக இருக்கிறார் என சிவாஜிலிங்கம் கூறியிருந்தார்.
ரெலோவிலிருந்து விலக்கப் பட்டால் தமிழ் மக்கள் கூட்டணியில் இணையலாமென சிவாஜியும், தமிழ் மக்கள் கூட் டணியில் பங்காளியாக இணையலாமென அனந்தி சசிதரனும் நம்பிக்கை யுடன் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், திடீர் திருப்பமாக விக்னேஸ்வரன் அணியில் இருவருக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ் மக்கள் கூட்டணியிலுள்ள பிரமுகர்கள் பலர் விக்னேஸ்வரனை நேரில் சந்தித்து, இருவரையும் கட்சியிலோ, கூட் டணியிலோ இணைக்கக்கூடாதென வலியுறுத்தியுள்ளனர்.