தேர்தலில் முப்பத்தைந்து வேட்பாளர்கள் இடம்பெற்று தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதன் மூலம் கிடைக்கும் மேலதிக செலவு ஏற்படுத்தியிருந்தாலும் இறுதிச்சுற்றுக்கு வரப்போவது இரண்டு பேர்தான்.
அவர்களில் முதலாமவர் சஜித் பிரேமதாசா ஆவார். இரண்டு இறுதிச் சுற்று வேட்பாளர்களில் சஜித்தே அனைத்து இனத்தவரையும் இலங் கையர்களாக கருதுகிறார் என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும்.
இந்த நாட்டில் சிங்கள மக்களுடன் தமிழ், முஸ்லிம் மக்களும் நம்பிக்கையுடன் இலங்கையர் என்ற அடிப்படை யில் கைகோர்த்துக்கொண்டு அவருடன் பயணிக்க முடியும் என்ற நம்பிக் கையை அவர் தமக்குள் ஏற்படுத்தியுள்ளார் என்று தமிழ் முற்போக்கு கூட் டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஒரு கண் மைத்திரி, ஒரு கண் மஹிந்த என்று சொல்லி வந்தவர்கள் எப் போதும் மகிந்தவுடன் உறவு கொண்டே இருந்தார்கள் என்று நமக்கு தெரியும். எங்கள் அரசாங்கத்தில் சிறிது காலம் பிரதியமைச்சராக இருந்த போதும்கூட இந்த உறவு இருந்தது எமக்கு தெரியும்.
நாம் இவர்களை இங்கே வர வேண்டாம் என தடுத்ததாக இவர்கள் பொய் செய் திகளை பரப்பிவந்ததும் தெரியும். நாம் யாரையும் தடுக்கவில்லை என்பதை நான் கடந்த வாரமே கூறியிருந்தேன். இன்று இவர்கள் தங்களது இரகசிய உறவை பகிரங்கப்படுத்தியுள்ளனர்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிமுகமும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் முதலாவது பிரச்சாரக் கூட்டமும் இரத்தினபுரி நகரசபை மண்டபத்தில் நேற்று (14) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டின் சமூக பொருளாதார கல்வி அடிப்படைகளில் மிகவும் பின் தங் கிய பிரிவினரான ஒன்றரை இலட்சம் தோட்டத் தொழிலாளர்களின் வாழ் க்கை நிலைமைகளை முழுமையாக அடையாளங்கண்டு அவர்களது பிரச்ச னைகளுக்கு தீர்வு தேட அரசாங்கத்தின் அனைத்து துறைகளையும் இணைக் கும் தோட்டத்தொழிலாளர் தொடர்பிலான விசேட ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைக்க போவதாக ஏற்கனவே உறுதி அளித்துள்ளார்.
இது ஒரு ஆய்வு செய்யும் ஆணைக்குழு அல்ல. ஜனாதிபதி செயலணி என்பது ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பில் செயற்படும் ஒரு விசேட அதிகார அணியாகும். தோட்ட தொழிலாளர்களின் வாழ்வுநிலை பிரச்சனைகளை இனி எவரும் ஆய்வு செய்ய வேண்டியதில்லை. அவை நமக்குத் தெரியும். நிறைய பிரச்சினைகளுக்கும் தீர்வை கண்டுள்ளோம்.
இனி எஞ்சியுள்ள பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். இதைத்தான் தோட்டத் தொழிலாளர் தொடர்பிலான விசேட ஜனாதிபதி செயலணி செய்யும். இன் னொரு மலையக கட்சி, இறுதி சுற்றின் இரண்டாவது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது பற்றிய சிலர் என்னிடம் அப்பிராயம் கேட்டனர்.
அது அந்தக் கட்சியின் நிலைப்பாடு. இது எங்கள் நிலைப்பாடு.
அவரவருக்கு அவரவர் நிலைப்பாடு தொடர்பில் நியாயங்கள் உண்டு. அவர்கள் இந்த முடிவை ஏன் எடுத்தார்கள் என்பதும் எனக்கு தெரியும். ஒரு கண் மைத்திரி ஒரு கண் மஹிந்த என்று சொல்லி வந்தவர்கள் எப்போதும் மகிந்தவு டன் உறவு கொண்டே இருந்தார்கள் என்று நமக்கு தெரியும்.
எங்கள் அரசாங்கத்தில் சிறிது காலம் பிரதியமைச்சராக இருந்த போதும்கூட இந்த உறவு இருந்தது எமக்கு தெரியும். நாம் இவர்களை இங்கே வர வேண் டாம் என தடுத்ததாக இவர்கள் பொய் செய்திகளை பரப்பிவந்ததும் தெரியும். நாம் யாரையும் தடுக்கவில்லை என்பதை நான் கடந்த வாரமே கூறியிருந் தேன்.
இன்று இவர்கள் தங்களது இரகசிய உறவை பகிரங்கப்படுத்தியுள்ளனர். அவ் வளவு தான்.யார், எங்கே, என்ன நிலைப்பாடு எடுத்தால் வெற்றி பெறப் போவது சஜித் பிரேமதாசதான். உறுதி செய்யப்படும். இது நவம்பர் 16 ஆம் திகதி ஆரம்பித்து 15 ஆம் திகதி உறுதி செய்யப்படும். எங்களைப் பொறுத்த வரையில் நான் ஏற்கனவே சொன்னது போல இறுதிச்சுற்று வேட்பாளர்களில் முதலா மவர் சஜித் பிரேமதாச மட்டுமே. அவர்தான் வெல்லப் போகிறார்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் பெருவாரியான வாக்குகளை பெறக்கூடிய தகைமை கொண்ட ஒரே வேட்பாளர் அவர் மட்டுமே. ஆகவே, அவர்தான் எங் கள் நாட்டின் அடுத்த ஜனாதிபதி.
எங்கள் இன்றைய அரசின் எல்லா நடவ டிக்கைகளும் திருப்தியானவை அல்ல என்பது நான் அடிக்கடி பகிரங்கமாக கூறும் உண்மை.
ஆனால் ஒப்பீட்டளவில் நாம் 2015 ஆம் வருடத்திலிருந்து முன்னேறி வந்துள் ளோம். இதை எவரும் மறுக்க முடியாது. இன்று எமக்குள் உள்ள சில குறை களை திருத்தி நமது பயணத்தின் அடுத்த கட்டத்தை இன்னும் சிறப்பாக கொண்டு செல்ல கூடிய தகைமை சஜத்திற்கு உண்டு.
ஆகவே நாட்டில் இன்று இருக்கக்கூடிய சந்தோசம் மகிழ்ச்சி சுதந்திரம் ஜன நாயகம் தொடர வேண்டுமென்றால் சஜித்திற்கு வாக்களிக்க வேண்டும்.
இன்றைய சந்தோசம் மகிழ்ச்சி சுதந்திரம் ஜனநாயகம் ஆகியவை புறந்தள்ளப் பட்டு மீண்டும் 2015ம் ஆண்டை நோக்கி பின்னால் கொண்டு செல்லப்பட வேண்டுமென்றால் நான் சொன்ன இரண்டாம் சுற்று வேட்பாளருக்கு வாக்க ளியுங்கள்.
கவலை, துன்பம், அழுகை, சர்வாதிகாரம் மீண்டும் வர வேண்டுமென்றால் அந்த இரண்டாம் வேட்பாளருக்கு வாக்களியுங்கள். ஆனால் நாட்டிலுள்ள நிதா னமாக சிந்திக்க தெரிந்த மக்களிற்கு எவருக்கு வாக்களிக்க வேண்டுமென்று தெரியும் என்றார்.