நாட்டுக்காக ஒன்றினைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கல்முனை விவசாய விரிவாக்கல் நிலையம் என் பன ஏற்பாடு செய்யப்பட்ட வீட்டுத்தோட்டம் மற்றும் இயற்கை சேதன பசளை தொடர்பான ஊக்குவிக்கும் செய்லமர்வு கல்முனை விவசாய விரிவாக்கல் திணைக்களத்தில் வியாழக்கிழமை (17) இடம்பெற்றது.
கல்முனை பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர். கே இராஜ துறை தலைமையில் கல்முனை விவசாய விரிவாக்கல் திணைக் களத் தின் விவசாய பொறுப்பதிகாரி கி.கிருத்திகாவின் நெறிப்படுத்தலில் காலை முதல் மாலை வரை இடம் பெற்றது.
இதன் போது வீட்டுத்தோட்டம் மற்றும் கூட்டேரு செய்கையாளர்கள் கலந்து கொண்டனர் இதன் போது இவர்களுக்கு இயற்கை சேதன பசளை செய்கை பற்றி வளவாளர்களால் தெளிவுட்டப்பட்டதுடன் செயன் முறை பயிற்சியு மளிக்கப்பட்டது.
இந்த செய்லமர்வில் வளவாளராக விவசாய பாடவிதான உத்தியோகத்தர் ஏ.ஜெயிலாப்தீன் மற்றும் கல்முனை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கி ணைப்பு உத்தியோகத்தர்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் வீட்டுத்தோட்டத்தில் ஈடு படுர்கள் கலந்து கொண்டனர்.