728x90 AdSpace

<>
Latest News
Friday, 18 October 2019

நூற்றுக்கணக்கான பிக்குகளை கொலை செய்த கருணா; போட்டுடைத்த அமைச்சர்!

நூற்றுக்கணக்கான பிக்குமார்களை கொலைசெய்த கருணாவின் ஆதரவை மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெற்றுக்கொள்ள முடியுமென்றால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார். 

இரத்தினபுரியில் இடம்பெற்ற நிகழ் வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில ளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட் டார். 

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனநாயக முறையில் செயற்படும் அரசியல் கட் சியாகும். ஜனாதிபதி தேர்தலில் அவர் களின் ஆதரவு யாருக்கு என்பதை அந்த கட்சியின் தலைவர் ஆர். சம்பந்தன் அறிவிக்காதவரை எங்களுக்கு எது வும் தெரிவிக்கமுடியாது. 

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளித்தால் அதனை வரவேற்று ஏற்றுக்கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. அத் துடன் பலாலி விமான நிலைய பெயர்ப்பலகையில் தமிழ் மொழிக்கு கீழ் சிங் கள மொழி பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதனை பாரிய பிரச்சினை போல் காட்ட சிலர் முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: நூற்றுக்கணக்கான பிக்குகளை கொலை செய்த கருணா; போட்டுடைத்த அமைச்சர்! Rating: 5 Reviewed By: Thamil