ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்சவே வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தை எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவை எதிர்த்து கடுமையான பிரசாரத்தை மேற்கொள்ளும் பொறுப்பை, பசில் ராஜபக்ச, சிவாஜிலிங்கத்திற்கு வழங் கியுள்ளதாகவும் சிவாஜியின் இந்த பிரசாரத்தினால், சிங்கள மக்களை தூண்டி அந்த சாதகத்தை கோட்டபாய வுக்கு பெற்றுக் கொள்வதே இதன் நோக்கம் எனவும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது.
அத்துடன் சிவாஜிலிங்கம் 50 ஆயிரம் வாக்குகளை பெறுவார் என கணக்கிட் டுள்ள பசில், அவருடன் இணைப்பு நடவடிக்கைகளுக்காக முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினரான சிறிபால அமரசிங்கவுக்கு வழங்கியுள்ளதாகவும் சிறி பால அமரசிங்க, பசில் ராஜபக்சவின் வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பு அதி காரியாகவும் இருந்து வருகிறார் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளது.
சிறிபால அமரசிங்க, ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகவும் போட்டியிடு கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.