எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ள நிலை யில் சில வேட்பாளர்கள் வேறு சில பலன்களை எதிர்பார்த்து ஜனாதிபதி தேர்த லில் களமிறங்கியுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் பதவி கிடைத் தவுடன் அனைத்து வேட்பாளர்களுக் கும் சுதந்திர ஊடக காலமொன்று அனைத்து அரச ஊடகங்கள் ஊடாக வும் கிடைப்பதாக அவர் தெரிவித் தார்.
அதேபோல், அனைத்து வேட்பாளர்க ளுக்கும் சுதந்திர தபால் சேவையும் கிடைப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த சிறப்புரிமைகளை சில வேட்பாளர்கள் வேறொரு வேட்பாளருக்காக பயன்படுத் துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த செயற்பாடு காரணமாக நாட்டிற்கு பாரியளவிலான பொருளாதார பின்னடைவு ஏற்படுவதாகவும், பொதுமக்க ளின் பணம் முறையற்ற வகையில் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப் பிட்டார்.
இதன் காரணமாக இதுபோன்ற தரப்பினருக்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவி பெற்றுக் கொடுக்கப்படுவது தொடர்பில் மேலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.