ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை 2015இல் ஏற்றுக்கொண்ட விட யங்களையும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அந்த ஆண்டு அறிக்கை யும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என அறிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச.
இன்று கொழும்பில் நடத்திய செய்தி யாளர் சந்திப்பில் இந்த அதிர்ச்சி அறி விப்பை வெளியிட்டார்.
ஏற்கனவே சரணடைந்தவர்கள், காணாமல் போனவர்கள் தொடர்பாக, எகத் தாளமாக பதிலளித்த கோட்டாபய, இந்த விவகாரத்திலும், இன்னும் “பழைய கோட்டாபயவாகவே“ இருக்கிறேன் என்பதை உறுதிசெய்தார்.
ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், இன்று நடத்திய முதலா வது செய்தியாளர் சந்திப்பிலேயே, தமிழ் மக்களிற்கு அதிர்ச்சியளிக்கும் விட யங்களை தெரிவித்தார்.
“எனது தனிப்பட்ட பார்வையில், இது ஒரு சட்ட ஆவ ணம் அல்ல.
ஆனால் எப்போதுமே நாங்கள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் இணை ந்து எந்தவொரு பிரச்சினையையும் தீர்ப்போம்“ என்றார்.
இந்த ஒப்பந்தத்தை அரசு கையெழுத்திட்ட ஆவணமாக ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏனெனில் இந்த ஆவணத்திற்கு தனது கட்சி பகிரங்கமாக தனது ஆட்சேபனை தெரிவித் துள்ளது என்றார்.
அத்துடன், போர்க்குற்றச்சாட்டுக்களையும் நிராகரித்தார்.
அனைத்து சமூக மக் களும் தங்கள் கௌரவத்தை பேணவும், கல்வி, வீட்டுவசதி மற்றும் வேலை வாய்ப்பு உள்ளிட்ட சம வாய்ப்புகளை அனுபவிக்கவும் அனுமதிக்கும் ஆட் சியை ஏற்படுத்தவுள்ளதாக தெரிவித்தார்.