வடக்கில் தமிழ் கட்சிகள் இணைந்து தயாரித்துள்ள 13 அம்சங்களின் அடிப் படையிலான அந்தக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன். அதில் எந்த பயனும் இல்லை.
நான் யதார்த்தத்தை பேசுவேன் இந்த 13 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களை சந்திப்பதற்கு கூட நான் தயாரில்லை. பிரச்சினைக ளுக்கு தீர்வு என்னவென்று கேட்டால் அதற்கு நான் பதிலளிக்கத் தயார் என்று மீண்டும் திமிர்த்தனமாக தெரி வித்துள்ளார் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ.
ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த 13 விடயங்கள் தொடர்பில் பேசமாட்டேன். இதனை தெளிவாக எழுதுங் கள். இந்த ஆவணத்தில் உள்ள விடயங்களை பேசுவதற்கு நான் தயாரில்லை. இதனால் எந்த பயனும் இல்லை. இதுதான் இந்த நாட்டின் பிரச்சனையாக வுள்ளது. இப்படித்தான் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
இந்த 13 விடயங்களை பற்றி பேசி பயனுளள்தா? வடக்கு கிழக்கை இணைக்கக் கோருகிறார்கள். ஒற்றையாட்சியை நீக்குமாறு கோருகிறார்கள். இவற்றை செய்ய முடியுமா?
யாராலும் செய்ய முடியாது.
கடந்த 72 வருடங்களாக இதனை செய்து வருகின்றனர். தற்போதும் இத னையே செய்ய முயற்சிக்கின்றனர். இதுவொரு பொய் நிகழ்ச்சியாகும். நான் யதார்த்தத்தையே பேசுவேன். இந்த 13 விடயங்களை அடிப்படையாக கொண்டு அவர்களை சந்திப்பதற்கு கூட நான் தயாரில்லை.
பிரச்சினைக்கு தீர்வு என்னவென்று கேட்டால் அதற்கு பதில் அளிக்கத் தயாராக இருக்கிறேன். அப்படியாயின் தமிழ் கட்சிகளை சந்தித்து பேசலாம். ஆனால் 13 விடயங்கள் தொடர்பில் பேசமாட்டேன். இதனை தெளிவாக எழுதுங்கள்.
ஒரு பக்க தகவல்கயை மட்டும் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ஜெனீவா தீர்மா னத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
பெரும்பான்மை சிங்கள மக்கள் விரும்பாத எதனையும் செய்ய முயற்சித்தால் அதில் சிக்கல் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும். அதுதான் யதார்த் தம். ஆனால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் புதிய விடயங்களை மேற்கொள்வோம். ஐ.நா நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். அமெரிக்கா இந்த பிரேரணையிலிருந்து விலகி விட்டது.
வெள்ளைக்கொடி ஏந்தி வந்தது தொடர்பாக பேசப்படுகிறது. வெள்ளைக்கொடி ஏந்தி வந்ததை எங்காவது காணொளியில் பார்த்தீர்களா? அதிகாலை நான்கரை மணிக்கு வருபவர்கள் யார் என்று கூட தெரியாது பிரபாகரனின் தாய், தந்தையரை கூட காப்பாற்றினோம். அவர்கள் பிரபாகரனின் பெற்றோர் என எமக்கு தெரியாது.
பொட்டு அம்மான் எவ்வாறு இருந்தார் என யாருக்கும் தெரியாது. ஒரு இரா ணுவ வீரருக்கு பொட்டு அம்மான் யாரென தெரியுமா? பொட்டு அம்மானை என்னால் கூட அடையாளம் காண முடியாது. பிரபாகரனை கூட அடையாளம் காண முடியாது. அதனால் பிரபாகரனை அடையாளம் காண அங்கு கருணாவை அனுப்பினோம்.
தமிழ் அரசியல் கைதிகள் என யாருமில்லை. சிறைக்கைதிகளே உள்ளனர். இன்னும் 200 பேர் அளவிலேயே உள்ளனர். நாங்கள் ஆயிரக்கணக்கான புலி களை புனர்வாழ்விற்குட்படுத்தி விடுவித்தோம். 200 பேர் விடயத்திலும் திட் டங்களை நடைமுறைப்படுத்தி தீர்வு காண்போம்.
நான் ஜனாதிபதியானதும் புதிய அரசாங்கம் அமையும். அதுதான் மக்களின் பிராா்த்தனை. மக்கள் நம்பும் ஒருவரை பிரதமாராக்குவேன் என்றார்.