728x90 AdSpace

<>
Latest News
Thursday, 17 October 2019

‘யாழ் செல்வோம்’: சென்னையில் உற்சாகமாக கேக் வெட்டி கொண்டாட்டம்!

41 வருடங்களின் பின்னர் இன்று (17) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலை யத்தில் இந்திய பயணிகள் விமானமொன்று தரையிறங்கியது. 

இன்று காலை திறக்கப்பட்ட யாழ்ப் பாண சர்வதேச விமான நிலையத் தில் தரையிறங்கிய முதலாவது விமானம் இதுவாகும். இந்தியாவை சேர்ந்த அலையன்ஸ் எயார் நிறு வனத்தின் விமானமொன்றே தரையி றங்கியது. இந்த நிறுவனமே யாழ்- சென்னை விமான போக்குவரத்தை மேற் கொள்ளவுள்ள நிறுவனமாகும். 

அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் சென்னை -யாழ்ப்பாணம் விமான சேவை இன்று சென்னையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. எயார் இந்தியா நிறுவத்தின் தலைவரும் எயார் இந்தியா குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான அஷ்வானி லொஹானியின் தலைமையில் இது தொடர்பான நிகழ்வு சென்னை விமான நிலையத்தில் இடம்பெற்றது. 

அங்கு உரையாற்றிய அஷ்வானி லொஹானி சென்னைக்கும் யாழ்ப்பாணத் திற்கும் இடையிலானை விமான சேவை ஆரம்பித்து வைக்கப்படுவதனை பெருமையாக கருதுகின்றேன் என்று தெரிவித்தார். நிறுவனத்தின் நிறைவேற் றுப் பணிப்பாளர் சுப்பையாவும் உரையாற்றினார். 

அலையன்ஸ் எயார் நிறுவனம் சேவையில் ஈடுபடும் 55 ஆவது நகரமாக யாழ் சர்வதேச விமன நிலையம் அமைந்துள்ளது. இந்த நிகழ்வு சென்னையில் இடம்பெற்றதை அடுத்து காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ‘யாழ் செல்வோம்’: சென்னையில் உற்சாகமாக கேக் வெட்டி கொண்டாட்டம்! Rating: 5 Reviewed By: Thamil