சவுதி அரேபியாவில் பேரூந்து விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டைச் சேர்ந்த 35 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியாவின் மதினா அருகே வெளிநாட்டினர் சென்று கொண்டிருந்த பேருந்து, நேற்றிரவு எக்ஸ்வேட்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த பயங்கர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த வெளிநாட்டினர் 35 பேர் பலியானதாக உள்ளூர் ஊடகங்க ளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
மதினா நகரில் இருந்து 170 கிலோ மீற்றர் தொலைவில் மெக்காவை இணைக்கும் சாலையில் இந்த விப த்து நடைபெற்றதாகவும், விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள் ளது.
விபத்துக்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் ஆசிய, ஆபிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.