எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலை வரான நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்ட மான், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச வுக்கு ஆதரவு அளிக்க தீர்மானித்துள்ளார்.
இதன்படி ஜனாதிபதி தேர்தல் தொடர் பான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன் னணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இடையே இன்றைய தினம் காலை கைச்சாத்திடப்பட்டுள் ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப் பந்தம் செய்துகொள்வதற்கான நிகழ்வு கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தி லிருக்கும் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று காலை நடை பெற்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல். பீரிசும் குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
இதனையடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கும், எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் தொண்டமான் பொன்னாடை போர்த்தி கௌரவித் தார்.
இந்த நிகழ்வில் முன்னாள் வடக்கு-கிழக்கு முதலமைச்சரான வரதராஜப் பெருமாள், முன்னாள் பிரதியமைச்சர் எஸ்.சதாசிவம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரான நிமல் சிறிபாலடி சில்வா, பொதுஜன முன்ன ணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந் தனர்.