ஆறு தமிழ் கட்சிகளிற்கிடையிலான இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், மீண்டும் இன்று மதியம் கட்சித் தலைவர்கள் சந்திப்பதென தீர்மானமாகியுள்ளது.
எனினும், இன்றும் ஆறு தமிழ் கட்சிக ளும் பொது ஆவணத்தில் கையெழுத் திடாது என்றுதான் தெரிகிறது.
நேற் றைய பேச்சுவார்த்தையின் பின்னர், பல் கலைகழக மாணவர்கள் இன்று தயாரித்த இறுதி ஆவணத்தில், முன் னணியின் நிபந்தனையான- இடைக் கால அறிக்கையை நிராகரிப்பது என்ற அம்சத்தை பல்கலைகழக மாணவர்கள் இணைக்கவில்லையென்பதை நம்பகரமாக இருந்தது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய பிரமுகர் ஒருவர் இந்த தக வலை பகிர்ந்து கொண்டார். பல்கலைகழக மாணவர்களால் தமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆவணத்தில், தமது நிபந்தனைகள் உள்ளடக்கப்பட வில்லையென்பதையும் உறுதி செய்தார்.
இலங்கை தமிழ் அரசு கட்சி, தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்), தமி ழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்), தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியன கடந்த நான்கு சுற்று பேச்சு நடத்தியிருந்தன.
மூன்று சுற்று பேச்சுக்களில் எட்டப்பட்ட இணக்கத்தின் அடிப்படையில், நேற்றைய நான்காம் சுற்றில் இறுதி ஆவணமொன்றை மாணவர் தரப்பு சமர்ப் பித்தது. எனினும், அதை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்கவில்லை. புதிய அரசியலமைப்பிற்கான இடைக்கால அறிக்கையை நிராகரிப்பதாக, அந்த ஆவ ணத்தில் குறிப்பிடப்பட வேண்டுமென முன்னணி நிபந்தனை விதித்தது.
இந்த நிபந்தனையிருந்தால் மாத்திரமே கையொப்பமிடுவோம் என முன்னணி குறிப்பிட்டது. அந்த நிபந்தனையை தமிழ் அரசு கட்சி, புளொட், ரெலோ நிரா கரித்தன. அப்படியொரு விடயம் சேர்க்கப்பட்டால், தாம் கையெழுத்திட மாட் டோம் என அவை அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டிருந்தன.
இதனடிப்படையில், நேற்றிரவும் இன்று காலையுமாக புதிய ஆவணம் தயாரிக் கும் பணிகள் நடந்தன. இந்த புதிய ஆவணத்தில், முன்னணியின் நிபந்தனை யான இடைக்கால அறிக்கையை நிராகரிப்பது என்ற விடயம் உள்ளடக்கப்பட வில்லை.
இதனால் இன்று முன்னணி கையெழுத்திடுவது சந்தேகமே என, முன்னணி யின் மூத்த பிரமுகர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.
இதேவேளை, முன்னணி இன்றும் விதண்டாவாதம் புரிந்தால், அவர்களை தவிர்ந்து ஏனைய ஐந்து கட்சிகளும் கையெழுத்திடலாமா என்பது குறித்த ஆலோசனையும் நடந்து வருகிறது.