அவன்கார்ட் வழக்கில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரான பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சியை ஜனாதிபதி மைத்ரிபால சிறி சேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தலையிட்டு தடுத்து நிறுத்திய தாக முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.
கோட்டாபய ராஜபக்சவை திட்டமிட்டு கைது செய்வதற்கான சதித்திட்டம் தற் போதைய ஐக்கிய தேசிய முன் னணி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவராக இருக்கும் ராஜித்த சேனாரத்னவின் வீட்டில் வைத்தே தீட்டப்பட்டதாகவும் விஜய தாச ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜ பக்சவுடன் இணைந்துகொண்ட நிலையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப் பிலேயே விஜயதாச ராஜபக்ச இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக் கின்றார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கு இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்கத் தீர்மானித் துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மஹிந்த – மைத்ரி அணியில் இணைந்துகொண்ட முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்றைய தினம் அறிவித்தார்.
தனது இந்த முடிவை அறிவிக்கும் வகையில் கொழும்பில் ஊடக சந்திப் பொன்றையம் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச நடத்தினார்.
பொது ஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச, அந்தக் கட்சி யின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உட்பட முக்கியத் தலைவர்கள் பங் கேற்நிருந்த இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தனது நிலைப்பாட்டை அறிவித்ததுடன், கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் எடுத்த முயற்சி குறித்த தகவல்களையும் வெளியிட்டார்.
“பழிவாங்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக காணப்பட்டது. அன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வ தற்கு சட்டமா அதிபர் திணைக்களம் கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தது. அது உண்மை.
எனினும் அதனை நடைமுறைப்படுத்துவதை நான் தடுத்து நிறுத்தினேன். அதனை நான் அமைச்சரவையில், நாடாளுமன்றத்தில், ஊடகங்களில் தெரி வித்தேன். அந்தக் கடிதம் அவன்கார்ட் தொடர்பில் முன்னைய அரசாங்கத்தில் அமைச்சர்களாகவிருந்த ஒருவரின் வீட்டில் வைத்து கடிதத்தின் மாதிரி உரு வாக்கப்பட்டு, சட்டத்தரணிகள் இருவரால் அது சட்டமா அதிபர் திணைக் களத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இரவு 8 மணிக்கு அந்த கடிதத்தில் கையொப்பமிடுகின்றார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட ஏழு - எட்டுப்பேரை கைது செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எனினும் அது குறித்து சட்டமா அதிபருக்கே தெரியாது. ராஜித சேனாரத்னவின் வீட்டில் வைத்துதான் இந்தக் கடிதம் உருவாக்கப்பட்டது.
நல்லாட்சியை நாம் இதற்காகவா உருவாக்கினோம். 30 வருட தீவிரவாதத்தை ஒழித்த கோட்டாபய ராஜபக்ச பயங்கரவாதியா? இதனை நான் ஜனாதிபதிக்கும் - பிரமதருக்கும் தெளிவுபடுத்தினேன். அதன் பின்னர் அது தடுத்து நிறுத் தப்பட்டது. இல்லையென்றால் அவர் அன்று கைது செய்யப்பட்டிருப்பார்”.
தகுதியில்லாத பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமித்த அரசியல் அமைப்புச் சபை கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டுமெனவும் முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
“யுத்தம் நிறைவடைந்தவுடன் நாட்டில் ஜனநாயக ஆட்சி ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென நாம் நினைத்தோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரை நாம் பொது வேட்பாளராக அறிவித்து நாம் வெற்றிபெறச் செய் தோம். அதன் பின்னர் நாம் நாடாளுமன்றத்தில் 41 உறுப்பினர்களைக் கொண்ட சிறிய கட்சியாக நாம் ஆட்சியமைத்தோம்.
எனினும் அந்த சந்தர்ப்பத்தில் இருந்து இடம்பெற்ற அனைத்து விடயங்களும். ஊடகங்கள் ஊடாக பொதுமக்களை சென்றடைந்தன என நான் நம்பவில்லை. ஆட்சிமைத்து முதல் வாரத்திலேயே யாப்பினை மீறி மத்திய வங்கி பிரத மருக்கு கீழ் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் சட்டத்தை மீறி அர்ஜுன மகேந்திரன் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
அதன் பின்னர் மத்திய வங்கி பிணைமுறி மோசடி இடம்பெற்றது. அதன் பின் னர் ஜெனீவாவில் இடம்பெற்ற விடயங்கள். நாட்டை மீட்டெடுத்த யுத்த வீரர் களை தூக்கு மேடைக்கு அனுப்புவதற்கு திட்டமிட்டவர்களே ரணில் தலை மையிலான அரசாங்கம்.
தீவிரவாதிகளை ஆதரித்து, உதவியளிக்கின்ற அரசியல்வாதிகளை இந்த அரசாங்கம் ஆதரித்தது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முழுயைமான பொறுப்பினை அரசியல் அமைப்புச் சபை ஏற்கவேண்டும். அரசியல் அமைப்புச் சபை அரசியலில் இரு ந்து விடுவித்து சுயாதீனமான ஆணைக்குழுக்களை அமைத்து அதன் ஊடாக வெளிப்படையான ஆட்சி முறைமையை ஏற்படுத்தும் நோக்கிலேயே செயற் பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும் இந்த சந்தர்ப்பத்தில் நிறைவேற்று அதிகாரத்தை ரணில் விக்ரம சிங்கவே பயன்படுத்தினார். பூஜித்த ஜயசுந்தரவை பொலிஸ் மா அதிபராக நியமிக்குமாறு அவரே பரிந்துரைத்தார். எனினும் நான் அதனை மறுத்தேன். இறுதியில் என்ன நடந்தது.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைத்து என்ன நடந்தது தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்தவர்களை நிரபராதிகளாக மாற்றியதுதான் மிச்சம்” என அவர் மேலும் தெரிவித்தார்.