728x90 AdSpace

<>
Latest News
Monday, 2 September 2019

புலிகளும் பாலகுமாரனும்- இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 03

பாலகுமாரன் விடுதலைப் புலிகள் அமைப்பில்
ஒரு கௌரவ உறுப்பினராக இருந் தார். பாலகுமாரனிற்கு புலிகள் கொடு த்த பணியென்றால் அது இறுதி யுத்த சமயத்தில்த்தான். ஆட்சேர்ப்பு. கட் டாய ஆட்சேர்ப்பிற்கு முதற்படியாக வன்னியை வலயங்களாக பிரித்து ஒவ்வொரு முக்கியஸ்தரை பொறுப்பாக நியமித்தார்கள். உடையார்கட்டுப் பகு தியில் பாலகுமாரன் செயற்பட்டார். வீதியில் செல்லும், வீடுகளில் உள்ள இளைஞர் யுவதிகளை ஒரு இடத்தில் ஒன்றாகச் சேர்த்து தீவிர பிரசாரம் செய் வார்கள். பாலகுமாரன் அதில் தீவிரமாக ஈடுபட்டார்.

பாலகுமாரன் வங்கி முகாமையாள ராக இருந்தவர். புலோலி வங்கியில் பணிபுரிந்தார். புலோலி வங்கிக் கொள் ளையுடன் சிறைக்குச் சென்று, விடு தலை அமைப்புக்களுடன் இணைந்து செயற்படத் தொடங்கியுள்ளாா்.

வடமராட்சியின் மந்திகை பகுதியை சேர்ந்தவர் பாலகுமாரன். இடதுசாரி கருத் துக்களில் ஈடுபாடாகி, சீனசார்பு இடதுசாரி கட்சியுடன் நெருக்கமாக செயற்பட் டும் வந்தார். சமூக அக்கறை கொண்டவராகவும் விளங்கினார். அந்த சமயத் தில் ஆயுத வழியில் நம்பிக்கை கொண்ட இளைஞர்கள் உருவாக ஆரம்பித் துள்ளனா். 

ஆயுத வழியில் ஈர்ப்புள்ள இளைஞர்கள் எல்லாக் கிராமங்களிலும் கணிசமாக உருவாகி விட்டனர். அப்படியான எண்ணமுடைய இளைஞர்களை சந்திக்கும் போது பாலகுமாரன் கொடுக்கும் ஆலோசனை, முதலில் உயர்தரம் வரை படி த்து முடித்துவிட்டு அரசியலில் இறங்குங்கள். அரசியலிற்கு இறங்கும் போது முதிர்ச்சி அவசியம் என்பது.

வங்கி முகாமையாளராக இருந்தாலும், சமூக அக்கறை காரணமாக பகுதி நேர மாக சமூகக்கல்வி, வரலாறு கற்பித்துக் கொண்டுமிருந்தார். மந்திகை பகுதி யில் இயங்கிய யாழ்ரன் என்ற தனியார் கல்வி நிறையத்திலும், வேறு சில இடங்களிலும் பகுதிநேரமாக கற்பித்தார். இதை வருமானம் ஈட்டும் தொழி லாக செய்யவில்லை. இப்படியாக பாலகுமாரனின் வாழ்வு நகர்ந்து கொண்டி ருந்தது.

இந்த இடத்தில் ஒரு பின்னோக்கிய பார்வைக்கு செல்ல வேண்டும். அகிம்சை வழியால் எந்த தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியாதென தீர்மானித்த இளை ஞர்கள் 1970 களின் தொடக்கத்தில் தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்து விட்டனர்.

பாரம்பரிய தமிழ் அரசியல்வாதிகளின் போக்கு விடுதலைக்கு உதவாதென பகி ரங்கமாக பேச தொடங்கி, பின்னாளில் பிரபல்யமான விடுதலை அமைப்புக்க ளின் தலைவர்கள் அப்போது சிறிய குழுக்களாக இயங்கத் தொடங்கினார்கள். சத்தியசீலன், பிரபாகரன், சிறீசபாரத்தினம், குட்டிமணி, தங்கத்துரை, பத்மநாபா போன்றவர்கள் அவர்களில் சிலர்.

அப்போது இளைஞர்களிற்கு புகலிடமாக இருந்தது தமிழ் மாணவர் பேரவை. அவர்கள் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயற்பாடுகளிற்கு இடையூறாக இருக்கிறார்கள் என, தமிழர் விடுதலைக்கூட்டணியின் மறைமுக ஆதரவுடன் தமிழ் இளைஞர் பேரவை ஆரம்பிக்கப்பட்டது. 

எனினும், இளைஞர் பேரவை ஆரம்பித்த சில வருடங்களிலேயே குழப்பங்கள் ஆரம்பித்து விட்டது. தமிழர் விடுதலைக்கூட்டணியின் செல்லப்பிள்ளையாக செயற்படுகின்றதென்ற அதிருப்தி உறுப்பினர்களிற்கிடையில் எழ ஆரம்பித் தது. விளைவு, 1975 இல் பேரவையிலிருந்து பலர் வெளியேறி ஈழவிடுதலை இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்தனர். 

புஸ்பராசா, முத்துக்குமாரசாமி, சுந்தர், வரதராஜபெருமாள் போன்றவர்கள் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். யாழ் நகரத்திலுள்ள ரிம்மர் மண்டபத்தில் மாநாடு நடத்தி, தமிழீழ விடுதலை இயக்கம் பற்றிய பகிரங்க அறிவித்தலை வெளியிட்டனர்.

எரிமலை என்ற வாராந்த பத்திரிகையையும் வெளியிட்டுக் கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் 1975 இன் பிற்பகுதியில் யாழ்ப்பாண மேயர் துரையப்பா சுட் டுக்கொல்லப்பட்டார்.

யாழ்ப்பாணத்தில் நடந்த நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டில் பதினொரு வர் கொல்லப்பட்டதற்கு துரையப்பா தான் காரணம், அவர் கொல்லப்பட வேண்டியவர் தான் என்ற கருத்தை தமிழர் விடுதலைக்கூட்டணி மேடை தோறும் பரப்பி வந்தது. இந்த சமயத் தில் துரையப்பா கொல்லப்பட்டார்.

துரையப்பாவை கொன்றது இளைஞர் பேரவை, தமிழீழ விடுத இயக்கங்களை சேர்ந்தவர்களாகத்தான் இருக்கலாமென கருதிய பொலிசார் இரண்டு அமைப் புக்களின் உறுப்பினர்களையும் தேடித்தேடி வேட்டையாடினார்கள்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் பெரும்பாலானவர்கள் கைதாகி சிறைக்கு சென்றனர். அதன் மத்திய குழுவிலிருந்த இரண்டு பேரும், செயற்பாட்டாளர்கள் சிலரும் தான் தப்பித்து தலைமறைவாக இருந்தனர். ஏற் கனவே வாராந்தம் எரிமலையென்ற சஞ்சிகையையும் வெளியிடுகிறார்கள். 

தலைமறைவு வாழ்க்கைக்கும் பணம் தேவை. பெரும் பணத்தட்டுப்பாடு. என்ன செய்யலாமென யோசித்தபோதுதான் வங்கிக்கொள்ளைக்கு திட்டமிட்ட மிட் டார்கள். அவர்கள் தேர்ந்தெடுத்தது புலோலி வங்கி. பாலகுமாரன் முகாமையா ளர். ஈழவிடுதலை இயக்க உறுப்பினர்கள் பாலகுமாரனை சந்தித்து பேசினார் கள். 

தீவிர எண்ணமுடைய இளைஞர்களுடன் அவருக்கிருந்த அபிமானம் காரண மாக விடயம் சுலபமாக முடிந்தது. குறிப்பிட்ட தினமொன்றில் வங்கியை கொள்ளையிட அனுமதித்தார். அந்த வங்கியில் பாலகுமாரன் தவிர்ந்த இன் னும் இரண்டு பணியாளர்கள் இருந்தார்கள். அவர்களிற்கு விடயம் தெரியாது.

வங்கிக்கொள்ளையின் பின்னர் காவல்த்துறை தீவிர விசாரணை நடத்தி சம் பந்தப்பட்டவர்களை கைது செய்தது. பாலகுமாரனிற்கு விடயம் ஏற்கனவே தெரியும். அதனை பொலிசார் கண்டறிந்து சிறை சென்றார். பின்னர் ஈரோஸ் அமைப்புடன் செயற்பட்டார். 

ஈரோஸ் அமைப்பில் இருந்தபோது அவர் இயக்கங்களுடன் ஏட்டிக்குப் போட் டியான அணுகுமுறை கொண்டவரல்ல. அதனால் 1990இல் ஈரோஸை கலைத்து விட்டு புலிகளுடன் இணைவது சுலபமானது. அதன்பின்னர் அவரை விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் என விளித்தார்கள். அரசியல் துறை யுடன் இணைந்து இருந்தார். 

கூட்டங்களில் பேசுவது, நிகழ்ச்சிகளில் பங்குகொள்வதென அவரது நாட்கள் கழிந்தன. அவர் போர்க்களத்திற்கு சென்றவரல்ல. இறுதி யுத்தம் தீவிரம் பெற்று, முதலாவது பாதுகாப்பு வலயம் அறிவிக்கப்பட்டது. 

உடையார்கட்டு சந்தி தொடக்கம் கைவேலி வரையான பகுதி பாதுகாப்பு வல யமாக அறிவிக்கப்பட்டது. இந்தபகுதியில் உள்ள வள்ளிபுனம் பாடசாலை மருத்துவமனையாக்கப்பட்டது. 2009 ஜனவரி இறுதியில் பாதுகாப்பு வலயம் மீது இராணுவம் அகோர செல் தாக்குதல் நடத்தியது. 

இதில் 50 வரையான மக்கள் கொல்லப்பட்டதாக அப் போது ஊடகங்களில் செய்தி வெளியானது. மருத்துவம னையாக இருந்த வள்ளி புனம் பாடசாலைக்குள் யாரையோ பார்த்துவிட்டு வந்த பாலகுமாரன் வாச லில் விழுந்த செல்லால் கையில் காயமடைந்தார். இறுதிவரை அந்த காயத்து டனேயே வாழ்ந்தார்.

குடும்பத்துடன் விடுதலைப்புலிகளிடமிருந்து தப்பி இராணுவத்திடம் செல்வ தற்கு அவர் முயன்றபோது தான் அவரது குடும்பத்தில் இரண்டாவது நபர் காயமடைந்தார். 

அடுத்த தொடர்கள்
































கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட் மாஸ்டர்!

































  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: புலிகளும் பாலகுமாரனும்- இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 03 Rating: 5 Reviewed By: Thamil