728x90 AdSpace

<>
Latest News
Wednesday, 2 October 2019

அவிசாவளையில் பதற்றம்: சிங்கள- முஸ்லிம் குழுக்களிடையே மோதல்!

அவிசாவளை – தல்துவ பகுதியில் இரண்டு தரப்புக்கு இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெறும் சூழ்நிலை எழுந்துள்ளதால் அங்கு பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

பஸ் ஒன்றின் சிங்கள சாரதிக்கும், முச்சக்கரவண்டியொன்றின் முஸ் லிம் சாரதிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே மோதலாக மாறி யுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சா ளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. 

தல்துவ – நாப்பாவல பகுதியில் கடந்த வாரம் தனியார் பஸ் ஒன்றின் சார திக்கும், முச்சக்கரவண்டி சாரதிக்கும் இடையில் வாய்த்தரக்கமொன்று ஏற் பட்டுள்ளது. 

அன்றைய தினம் இந்த சர்ச்சை முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், முச்சக்கரவண்டி சாரதி உள்ளிட்ட சிலர், இன்று காலை பஸ்ஸின் சாரதி மீது நாபல நகர் பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த தாக்குதலில், பஸ்ஸின் சாரதி காய மடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின் றது. இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை உடன டியாக கைது செய்யுமாறு வலியுறுத்தி நாபல பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதுடன், அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரி விக்கப்படுகிறது.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: அவிசாவளையில் பதற்றம்: சிங்கள- முஸ்லிம் குழுக்களிடையே மோதல்! Rating: 5 Reviewed By: Thamil