தமிழ் மக்கள் தங்களது சொந்தப் பிரதேசங்களை நிர்வகிப்பதற்கான சந்தர்ப் பத்தை ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதி பதியாக தெரிவாகினால் நிச்சயமாக வழங்கப்படும் என்று அக்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சருமான சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய ஸ்ரீலங்காவிற்குள் அதிகபட் சமான அதிகாரப் பரவலை வழங்க ஐக்கிய தேசிய முன்னணி தயாராக இருப்பதை தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு மற்றும் ஏனைய சிறுபான்மை கட்சிகளுக்குத் தெரியப்படுத்தியிருப் பதாகத் தெரிவித் துள்ளாா்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
எமது கட்சியின் பெயர் ஐக்கிய தேசியக் கட்சி. டி.எஸ் சேனாநாயக்க இக் கட்சியை ஆரம்பிக்கும் போது அனை த்து இன மக்களையும் இணைத்துக் கொண்டு ஐக்கியமாக பயணிப்பதே தொனிப்பொருளாக அமைந்தது.
ஆகவே ஐக்கிய ஸ்ரீலங்காவிற்குள் அதியுட்ச அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த நாங்கள் இணக்கம் வெளியிட்டிருக்கின்றோம்.
அதற்காக தமிழ் தேசியக் கூட் டமைப்பு உட்பட சிறுபான்மையினக் கட்சிகளும் எம்மிடம் அதனையே கோரி யுள்ளன.
நிர்வாக செயற்பாடுகளுக்காக இந்த செயற்பாட்டை செய்யவே வேண்டும். எமக்குத் தெரியும் ஏற்கனவே என்ன வகையான பிரச்சினைகள் இருந்தன என்று. மொழிப் பிரச்சினையே இவ்வனைத்திற்கும் காரணமாகும்.
நிர்வாகத்தில் மொழியில் ஏற்பட்ட பிரச்சினைகளே அனைத்திற்கும் காரணமா கியது. அந்தந்த பகுதி மக்களுக்கு தங்களது பிரதேசங்களை நிர்வகிப்பதற்காக அந்த உரிமைகளை வழங்குவதற்காக நாங்கள் அதிகபட்சமாக செயற்படு வோம் என்பதை தெரிவித்திருக்கின்றோம்.
அதேபோல எமது தேசியத்திற்குள் அனைவரையும் இணைத்துக் கொண்டே முன்நகர வேண்டும் என்கின்ற எமது செயற்பாட்டு உதாரணங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய பிரதிநிதிகளும் உணர்ந்திருக்கின்றனர்.
ஸ்ரீலங்கா பௌத்த நாடு. எனினும் பௌத்தத்துவம் என்பது அனைத்து இன மக் களையும் நட்புறவாக நடத்தி, பாதுகாத்து நாட்டை முன்நகர்த்துவதே அர்த்த மாகின்றது. நாங்கள் இனப்பாகுபாடு பார்ப்பதில்லை.
சிங்களம் மற்றும் தமிழ் மக்களிடையே மொழிகளில் வேறுபாடு இருந்தாலும் கலாசாரங்களில் அனைத்துமே சமமாகவே காணப்படுகின்றன. மிகவும் பொய் யான கோணத்திலேயே இந்த நாட்டை இனங்களை அடிப்படையாகக் கொண்டு பிரித்திருக்கின்றனர்.
மொழிப் பிரச்சினையே இதில் காணப்படுகின்றது. எனக்கும் தமிழ் மொழி பேசமுடியுமாக இருந்தால் தமிழ் மக்களும் சிங்களம் பேசக்கூடியவர்களாக இருந்தால் பிரச்சினை இருக்காது.
இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவே இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாவதற்கான இந்தியாவின் முழுமையான ஆதரவு கிடைக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்தியா அபிவிருத்தியடைந்து வருவது எமக்கும் அதில் பிரயோஜனமுள்ளது. உலகம் முன்புபோல் அல்ல. எமக்கு பாகிஸ்தான் அபிவிருத்தி அடைவதுவும் பிரயோஜனமானதுதான். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோத ல்கள் இடம்பெற்றாலும் பாகிஸ்தான் அபிவிருத்தி அடைவது இந்தியாவுக்கே பிரயோஜனமாகும்.
அதேபோல இலங்கை அபிவிருத்தி அடைவது இந்தியாவுக்கும் பிரயோஜன மாகும். ஆகவேதான் இலங்கையில் ஒரு பிரச்சினை காணப்பட்டால் அது இந் தியாவுக்கு தலைவலியை கொடுக்கும்.
இலங்கையில் பிரச்சினை இல்லாமல் சமாதானத்தையும், அபிவிருத்தியைப் பற்றி சிந்திக்கும் பிரதமர் மோடியைப் போன்ற வினைத்திறனைக் கொண்ட இன்னுமொரு தலைவரையே மோடி தேடுகின்றார்.
அதனடிப்படையில் சஜித் பிரேமதாஸவுக்கு மோடியின் ஆதரவு நிச்சயமாக கிடைக்கும். வேறு பிரயோஜனங்களைப் பெறுவதற்கல்ல, நாட்டை அபிவி ருத்தி செய்வதற்கு ஆகும்.
இலங்கை அபிவிருத்தி கண்டால் அதனூடாக இந்தியாவுக்கு பல்வேறு வணி கம் சார்ந்த பிரதிபலன்கள் ஏற்படும். இந்தியா அபிவிருத்தியடைந்தால் எமக் கும் வர்த்தகநலன் கிடைக்கும். இரு நாடுகளும் பிரயோஜனமடையும். பிரச்சி னைகள் குறைந்த, இனவாதங்களை ஏற்படுத்தாத,
ஒற்றுமையாக செல்கின்ற இளைய தலைவர் ஒருவரையே நிச்சயமாக இந் தியா எதிர்பார்க்கின்றது.
இதன்படி சஜித் பிரேமதாஸவுக்கு இந்தியாவின் ஆத ரவு மட்டுமல்லாமல், அனைத்து நாடுகளினதும் ஆதரவுகள் கிடைக்கும்.
இலங்கையை பிழையான கண்ணோட்டத்தில் பார்க்கின்ற நாடுகளைத் தவி ர்ந்த ஏனைய அனைத்து நாடுகளினுடைய ஆதரவும் சஜித் பிரேமதாஸவுக்கே கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளாா்.