யாழ்ப்பாணத்தில் 250 முஸ்லிம் குடும்பங்களிற்கான வீட்டுத் திட்டம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
யாழ்ப்பாணத்தின் அராலி, பொன் னாலை சந்திப்பகுதியில் உள்ள 7.5 ஏக்கர் காணியில் இந்த வீடுகள் அமைய வுள்ளன.
இரண்டு மாடிகளை கொண்ட இர ட்டை வீடுகளாக ஒவ்வொன்றும் அமையும்.
ஒவ்வொரு வீடும் 600 சதுர அடிகளை கொண்டிருக்கும்.
இந்த வீட்டுத் திட்டம் பற்றி தமிழ் பக்கம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந் தது.
இறுதியாக பிரதமர் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, இந்த வீட்டுத் திட்டத் திற்கு பிள்ளையார் சுழி போட்டிருந்தார். அதற்கு முன்னர் பிரதமர் யாழ்ப்பா ணம் வந்திருந்தபோது, வீட்டுத்திட்டத்திற்கான முதற்கட்ட ஆலோசனையை அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் யாழ் முதல்வர் ஆகியோர் முஸ்லிம் மக்க ளுடன் இணைந்து மேற்கொண்டனர்.
அப்போது, என்ன நடந்தாலும் வீட்டுத் திட்டத்தை அமைத்து தருவேன் என யாழ் முதல்வர் அடித்துக் கூறியிருந்தார்.
கடந்த முறை பிரதமர் யாழ் வந்த போது நடந்த அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்தில், வீடு தேவையானவர்களின் உண்மையான பதிவை விட அதிக தொகையை ரிசாத் தரப்பு குறிப்பிடுவதை யாழ் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டியிருந்தார்.
அந்த பகுதியிலுள்ள தமிழ் சட்டத்தரணியொருவர் இந்த காணியை விற்பனை செய்திருந்தார். குடியேற்றம் அமைப்பதற்காக இந்த காணியை முஸ்லிம் பிர முகர் ஒருவர் கொள்வனவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.