728x90 AdSpace

<>
Latest News
Wednesday, 2 October 2019

வீதியா?… வெள்ள வாய்க்காலா?: கிளிநொச்சியில் போராட்டம்!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த பிரமந்தனாறு கிராம மக்களும், அப்பிரதேச மக்களும் இன்று (02) காலை கவனயீர்ப்பு போராட் டம் ஒன்றை மேற்கொண்டனர். 

தங்களது கிராமத்தில் இதுவரை கால மும் எந்த வீதியும் நிரந்தரமாக புனர மைக்கப்படவில்லை. மத்திய அரசும் சரி, கடந்த ஐந்து வருடங்களாக ஆட்சி யில் இருந்த மாகாண அரசும் சரி, தற்போது அதிகாரத்தில் உள்ள கரை ச்சி பிரதேச சபையும் சரி எங்களது கிராமத்தை புறக்கணித்தே வருகின்றனர். 

கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லைக் கிராமமான எங்களது கிராமம் மிக மோச மான உட்கட்டுமான குறைப்பாடுகளை கொண்டுள்ளது. இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபை உட்பட சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பல தட வைகள் எடுத்துக் கூறியும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்த பொது மக்கள், 

அரசியல் ரீதியாகவும் வேறு காரணங்களுக்காகவும் எங்களது கிராமத்தை புறக்கணிக்க வேண்டாம் என சம்மந்தப்பட்ட திணைக்களங்களை கோருவதாக தெரிவித்துள்ளனர். இப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பொது மக்களும், மாணவர்களும் கலந்துகொண்டனனர்.


  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: வீதியா?… வெள்ள வாய்க்காலா?: கிளிநொச்சியில் போராட்டம்! Rating: 5 Reviewed By: Thamil