தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை ஜனாதிபதி தேர்த லில் பொது வேட்பாளராக களமிறங்கும்படி நேற்று சிவில் சமூக பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டனர்.
அதேபோன்று, வடக்கு முன்னாள் முதல மைச்சர் க.வி.விக்னேஸ்வரனை இன்று சந்தித்து, இதே கோரிக்கையை முன் வைக்கவுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்கும் முயற்சியில் தமிழ் மக்கள் பேரவை மற் றும் சில சிவில் செயற்பாட்டாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
அது குறித்த உள்ளக கலந்துரையாடல்கள் நடந்து வருகிறது என்பதையும், இதே கோரிக்கையுடன் நேற்று (2) இரா.சம்பந்தனை சந்தித்து பேசினார்கள் என் பதையும் குறிப்பிட்டிருந்தோம்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் கட்சிகளை இணைக்கும் முயற்சியில் இறங்கிய தமிழ் மக்கள் பேரவை, அந்த பணியை முன்னெடுக்க ஒரு குழுவை அமைத்தது.
மதத்தலைவர்கள், பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதுபவர்கள், சில விரிவுரையாளர்கள் உள்ளடங்கிய அந்த குழு, நேற்று இரா.சம்பந்தனை சந்தித்தது.
இன்று வடக்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை சந்திக்க வுள்ளது.
இந்த குழு நேற்று கொழும்பில் இரா.சம்பந்தனை சந்தித்து பேச முன் னதாக, கொழும்பில் தமக்கிடையில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
தமிழ் வேட்பாளரை நிறுத்தி அவருக்கு மக்கள் வாக்களிப்பதன் மூலம், தென்னி லங்கை வேட்பாளர்களில் தமிழர்களிற்கு நம்பிக்கையில்லையென்ற செய் தியை சர்வதேசத்திற்கு உணர்த்தலாம், தேர்தல் பகிஸ்கரிப்பு இதற்கு தீர் வில்லையென அந்த குழு முடிவெடுத்தது.
அந்த வேட்பாளர் பிரபலமானவராக இருக்க வேண்டியதில்லை, ஒரு அடை யாளமாகவே இருப்பார் என குறிப்பிட்டு, ஒரு விவசாயியையோ, யுத்தத்தில் அங்கத்தை இழந்த முன்னாள் போராளியொருவரையோ நிறுத்தலாம் என தீர்மானித்திருந்தனர்.
இதன்பின்னர் நேற்று மதியமளவில் இரா.சம்பந்தனை சந்தித்து பேசியபோது, தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து சிவில் சமூகம் விளக்க மளித்தது. அந்த கருத்தக்களை செவிமடுத்த இரா.சம்பந்தன், அது குறித்து ஆரா யலாம் என்றார்
இதன்போது, யாரும் எதிர்பாராத நிலையில், யாழ் ஆயர் “ஐயா நீங்களே போட்டியிடுங்கள்“ என்று கேட்டார்.
இது பற்றி ஆழ்ந்து யோசித்த சம்பந்தன், இது பற்றி தான் யோசனை செய்வ தாகவும், சிவில் சமூகத்தினரையும் யோசனை செய்யுமாறு கேட்டுக் கொண் டார்.
இதன்பின்னர் நேற்று மாலை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை அந்த குழு சந்தித்து பேசியது.
இதன்போது, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்துமாறு கேட்கப்பட்டது.எனினும், அதனை மறுத்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேர்தல் பகிஷ்கரிப்பென்ற நிலைப்பாட்டில் நாம் இருக்கிறோம் என தெரிவித்தார்.
இன்று, க.வி.விக்னேஸ்வரனை சந்திக்கவுள்ளது இந்த குழு. இதன்போது, அவ ரையும் பொது வேட்பாளராக களமிங்கும்படி அந்த குழு கோரவுள்ளது. விக்னேஸ்வரன் அதற்கு சம்மதித்தால், இன்று இரவே சிவில் சமூகத்தினர் கொழும்பு புறப்பட்டு சென்று இரா.சம்பந்தனை சந்திக்கவுள்ளனர்.
விக்னேஸ்வரன் அதற்கு சம்மதித்தால், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலா ளர் பதவியிலிருந்து பதவி விலக கோரப்படுவார். அதன்பின்னர், இரா. சம்பந்தனையும், விக்னேஸ்வரனையும் உடனடியாக சந்திக்க வைத்து, பொது வேட்பாளரை நிறுத்துவதே திட்டம்.
6ம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த லாம் என்பதால், நாளைக்குள் இதற்குள் இறுதி முடிவை எட்ட சிவில் சமூக குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.