கோட்டாபய ராஜபக்சவிற்கு வழங்கப்பட்ட இரட்டை குடியுரிமை முறையற் றது என குறிப்பிட்டு, தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று மதியம், இரண்டாவது நாளாக விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.
சிவில் செயற்பாட்டாளர்கள் காமினி வெயங்கொட, பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
கோட்டாபய வின் இரட்டை குடியுரிமை ஆவணங்கள் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் இல்லையென்ற பரபரப்பு தகவல் நேற்று வெளியாகியிருந்தது.
கோட்டாபயவின் ஆவணங்கள் தொடர்பான இந்த வழக்கில், மனுதாரர் தரப் பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணிகள் முக்கியமான ஒரு அடிப்படை புள்ளியை மையமாக வைத்தே சமர்ப்பணங்களை செய்து வருகிறார்கள்.
அது-
கோட்டாபயவின் இரட்டை குடியுரிமை ஆவணத்தில் கையொப்பமிடுவதற்கு, மஹிந்த ராஜபக்சவிற்கு அதிகாரம் இல்லையென்பதே அந்த வாதம்.
மஹிந்த வின் கையொப்பத்துடனேயே கோட்டாபயவின் இரட்டை குடியுரிமை ஆவ ணம் வழங்கப்பட்டுள்ளது.
மனுதாரர்கள் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ இந்த அடிப்படையில் வாதங்களை முன்வைத்தார்.
கோட்டபய ராஜபக்ச 2003 க்கு முன்னர் இலங்கையின் குடிமகனாக இருந்தார். அதன்பிறகு, ஜனவரி 31, 2003 அன்று அல்லது அதற்கு பின்னரான காலத்தில், அவர் அமெரிக்க குடி மகனாக மாறிவிட்டார்.
அன்று முதல், கோட்டபய ராஜபக்ச இலங்கையின் குடியுரிமைச் சட்டத்தின் கீழ் இலங்கையின் குடிமகனாக இல்லை.
பின்னர், அவர் இலங்கை திரும்பிய பின்னர், இலங்கை குடிமகனாக இல்லாததால், புதிய பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்காக, சம்பந்தப்பட்ட அமைச்சகத் திற்கு விண்ணப்பிப்பதன் மூலம் இரட்டை குடியுரிமை அந்தஸ்தைப் பெற வேண்டியிருந்தது.
கோட்டபய ராஜபக்ஷ, நவம்பர் 18 – 24, 2005 காலகட்டத்தில், அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே, சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு இரட்டை குடியுரிமை சான்றிதழ் பெற விண் ணப்பித்திருக்கலாம்.
2005 நவம்பர் 18இல் இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்தார். எனவே, அவர் ஜனாதிபதி பதவியேற் றதும், நாடாளுமன்ற உறுப்பினராகவோ, பிரதமராக இல்லை.
நவம்பர் 18, 2005 அன்று மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றதும், அமைச்சரவை கலைக்கப்பட்டது.
புதிய பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அமைச்சுகளுக்கு விடயதானங்களை ஒதுக்குவது நவம்பர் 21, 23 மற்றும் டிசம்பர் 08 ஆகிய திகதிகளில் நடந்தது.
எனவே, இந்த காலம்வரை இலஙகையில் அமைச்சரவை செயற்படவில்லை.
கோட்டாபய ராஜபக்சவின் இரட்டை குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்ட போது அமைச்சர்கள் அல்லது செயலாளர்கள் செயல்படவில்லை.
ஜனாதிபதி யின் உத்தரவின்படி சம்பந்தப்பட்ட அமைச்சு செயலாளர், இரட்டை குடியு ரிமை சான்றிதழில் கையொப்பமிட்டுள்ளார்.
ஆனால் அரசியலமைப்பின் கீழ் செயலாளரால் அப்படி செயற்பட முடியாது என்றார்.
அமைச்சரவை இல்லாத நிலையில் அரசாங்கத்தின் நிர்வாகக் கட் டமைப்பை கையாள ஜனாதிபதியிடம் அதிகாரம் ஏதேனும் உள்ளதா என்ற மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் யசந்தா கொடகொட இதன்போது கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சுரேன பெர்னாண்டோ, 1978 அரசியலமைப்பு என்பது வெஸ்ட்மின்ஸ்டர் மற்றும் ஜனாதிபதி நிர்வாக முறைகள் இரண்டின் கலவை யாகும். தனியொரு நபரால் செயல்படுத்த அத்தகைய அதிகாரங்களை வழங் கக்கூடாது என்பதே இதன் நோக்கம்.
ஒட்டுமொத்தமாக ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்திற்கும் அமைச்சர் கள் மற்றும் அவர்களின் செயலாளர்கள் மீது நிறைவேற்றப்பட்ட நிறைவேற்று அதிகாரங்களுக்கும் வித்தியாசம் உள்ளது என்பதையும் அவர் வலியுறுத்தி னார்.
எனவே முன்னாள் ஜனாதிபதி அமைச்சரவை இல்லாத நிலையில் அத்தகைய அதிகாரங்களைப் பயன்படுத்த முடியாது என்று அவர் கூறினார்.
சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோவும், சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் ஒரே சட்ட நிறு வனம் சார்பில் செயற்பட்டு வருவதும், முன்னாள் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் வழக்கில், மனுதாரர் சார்பில் எம்.ஏ.சுமந்திரனுடன், சுரேன் பெர்னாண்டோவும் முன்னிலையாகி வருவது குறிப்பிடத்தக்கது.